டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதலில் பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.


Advertisement

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடவுள்ளது. அதே நேரம் இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.


Advertisement

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் கார்லஸ் ப்ராத்வெயிட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டியில் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புவனேஷ் குமார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement