பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தார். அவரை பதவியை விட்டு நீக்கிய அதிபர் சிறிசேன, ராஜபக்சேவை திடீரென பிரதம ராக நியமித்தார். இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டது. ரணில், பிரதமராக தானே நீடிப்பதாக தெரிவித்து வரும் நிலையில் அங்கு உச்ச கட்ட நெருக்கடி நிலவுகிறது.
இதற்கிடையில், இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கிய அதிபர் சிறிசேன, 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கதான் பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி, ராஜபக்சவின் நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்பதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை வரும் 7ஆம் தேதி கூட்டுவதாக தெரிவித்துவிட்டு, பின்னர் தாமதிப்பது ஏன் என சிறிசேனவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்றத்தைக் கூட்ட தாமதிப்பது ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைப்பதற்குச் சமம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Loading More post
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!