பாலைவனத்தில் ஒரு பகுதியை காட்டி, "நாளை முதல் இந்த இடம் உனக்கு சொந்தம்" என்று அமீரகவாசியிடம் கூறியது, அல் அய்ன் நகர முனிசிபாலிடி.
அந்த அரபியோ "இந்த இடத்தில் நான் என்ன செய்ய?" என்று கேட்டார்.
"இந்த இடத்தில் நீங்கள் தக்காளி பயிரிட போகிறீர்கள்" என்றது அரசு. அந்த அரபிக்கு ஆச்சரியம்.
"எவ்வாறு இது சாத்தியம்?" என்று கேட்டார்.
"அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்" என்றது அரசு.
அந்த அரபிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாலைவன மண்ணை சுமார் 5 அடிக்கு அள்ளி வெளியேற்றினார்கள், பிறகு பயிரிட தோதுவான மண்ணை அந்த இடத்தில் கொட்டினார்கள். தண்ணீர் வசதியை அங்கே கொண்டுவந்தார்கள். தக்காளி பயிரிட்டார்கள், நல்ல விளைச்சல்.
தக்காளி நன்றாக காய்க்க தொடங்கியது, அந்த இடத்தின் சொந்தகாரராக அறிவிக்கப்பட்ட அந்த அரபி சும்மா வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தார். அறுவடை நடந்தது, அரசே அந்த தக்காளிக்கு உரிய விலை கொடுத்து அந்த அரபியிடம் வாங்கியது, வாங்கிய தக்காளியை சில பரிசோனைகளுக்கு பின்பு கொண்டு போய் குப்பையில் கொட்டினார்கள். பிறகும் அதே போல அனைத்து செலவையும் அரசே செய்துவிட்டு, தக்காளியையும் விலை கொடுத்து வாங்கினார்கள். இரண்டாவது, மூன்றாவது முறையும் பரிசோதனைக்கு பிறகு தக்காளியை கொண்டுபோய் குப்பையில் கொட்டினார்கள்.
நான்காவது முறையும் தக்காளி நல்ல விளைச்சல். அதையும் பரிசோதனை செய்தார்கள். எதிர்பார்த்த நல்ல பலன் கிடைத்தது. அந்த தக்காளி மனிதர்கள் உண்ணும் அளவிற்கான சுவையை கொண்டிருந்தது. அந்த தக்காளியை குப்பையில் கொட்டாமல், தக்காளி பேஸ்ட் தயாரித்து விற்பனைக்கு அனுப்பினார்கள். சும்மா வெறுமனே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த அரபிக்கு அதன் லாபத்தை கொடுத்தார்கள்.
பின்பு தக்காளி பழமாக மார்கெட்டில் விற்பனைக்கு அனுப்பினார்கள். அதன் லாபத்தையும் அந்த அரபிக்கே கொடுத்தார்கள்.
ஐந்தாவது விளைச்சல் ஆரம்பிக்க போகும் போது, அந்த அரபியை அழைத்து, "இதுதான் விவசாயம். இனி நீ தான் விளைவிக்க வேண்டும்" என்று கூறினார்கள். இப்படித்தான் பாலைவன மக்கள் விவசாயத்தை கற்றுக்கொண்டார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் அய்ன் ( Al Ain) என்ற இடத்தில் விவசாயம் பிறந்த முறை இது. இது அபுதாபி மாகாணத்தின் கீழ் இயங்கும் நகரம். தற்போது, நகரின் அன்றாட தேவைக்கான அத்தனை காய்கறிகளும் விளைவிக்கப் படுகின்றன. இன்னும் சில வருடங்களில் அவர்கள் தன்னிறைவை அடைவார்கள், கோழி பண்ணை, பால் பண்ணை போன்றவைகளும் இங்கே அதிகரித்துள்ளன.
பெட்ரோல் ஏற்றுமதியை போலவே, உணவு பொருட்களையும் அரபு நாடுகள் ஏற்றுமதி செய்தாலும் ஆச்சரியம் இல்லை.
- நம்பிக்கை ராஜ் (முகநூல் பதிவு)
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!