ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவுகள் காணப்படும். இந்த வருடமும் அங்கு பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட இந்த வருடம் அதிகப் பனிப்பொழிவுக் காணப்படு வதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்கள் ஜம்முவுக்கு திருப்பி விடப்பட்டன.
பனிப்பொழிவால் அங்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் சாலை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏராளமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. பனிப்பொழிவு காரண மாக நீரோட்டம் தடைப்பட்டுள்ளது.
இதே போல் இமாச்சலப் பிரதேசத்திலும் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் ஆப்பிள் பழங்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ளனர்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?