JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’மூடா் கூடம்’ இயக்குநா் நவீன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனியும் அருண் விஜய்யும் இணைந்து நடிக்க உள்ளனர்.

நடிகர் விஜய் ஆண்டனி, தற்போது ’திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை கணேஷா இயக்கியுள்ளார். இதை அடுத்து ’கொலைகாரன்’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தை அடுத்து அவர் நடிக்கும் படத்தை ’மூடர் கூடம்’ நவீன் இயக்குகிறார்.அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இதில், தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோவாக அருண் விஜய்யும் நடிக்கிறார். ’செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கும் ‘தடம்’ படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதோடு பிரபாஸ் ஹீரோவாக ’சாஹோ’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

இதுபற்றி இயக்குனர் நவீனிடம் கேட்டபோது, ’மூடர் கூடம்’ படத்துக்குப் பிறகு, ’அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்து விட்டேன். இதில், ’கயல்’ ஆனந்தி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதையடுத்து விஜய் ஆண்டனி -அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கு கிறேன்.

ஸ்டைலிஷான ஆக்‌ஷன் திரில்லர் வகை படம் இது. அருண் விஜய்யும் விஜய் ஆண்டனியும் ’அக்னி நட்சத்திரம்’ பிரபு-கார்த்திக் போல படத்தில் வருவார்கள். இருவருக்குமே சரி சமமான முக்கியத்துவம் இருக்கிறது. ஹீரோயின் உட்பட அனைத்து கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது’ என்றார்.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசா் உட்பட பலர் நடிக்கின்றனர். ’அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் பணியாற்றிய பாஷா இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றுபவர். ’மூடர் கூடம்’ படத்துக்கு இசை அமைத்த நடராஜன் இசை அமைக்கிறார். ஷூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது.

Advertisement: