தீபாவளி: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Metro-Rail-Time-Extended-in-Chennai

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நாளை மறுநாள் முதல் 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக மக்கள் நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல, பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் என்பன இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின்  நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அதிகரித்துள்ளது. 


Advertisement

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி அதிக அளவிலான பயணிகள் வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பகுதிகளுக்கு பயணிப்பார்கள் என்ற காரணத்தால், வழக்கமாக 10 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிவரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் (நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி) கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு சற்று ஆறுதலாக இருக்கும், காரணம் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து சரியான நேரத்திற்கு பேருந்து நிலையங்களை அடைய மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயன்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை உள்ள மெட்ரோ சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement