[X] Close >

டி20 தொடரில் தோனி நீக்கம்: விராத் கோலிக்கு ரெஸ்ட்!

Dhoni-not-part-of-T20I-squad

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி நீக்கப் பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இன்னும் இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. இதையடுத்து இரு அணிகளும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து, முதலில் மூன்று டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த ஆறு டி 20  போட்டிக்கான இந்திய அணி புனேவில் நேற்று அறிவிக்கப்பட்டது. 


Advertisement

இதில், கடந்த சில வருடங்களாக ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி, நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு தோனி நீக்கப்படுவது இதுதான் முதல் முறை. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி 20 தொடருக்கு கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்: 


Advertisement

ரோகித் சர்மா (கேப்டன்), தவான், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், சேஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ‌நதீம்.

(சுந்தர்)

ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணி: 

விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், சேஹல், வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

ஆஸ்திரேலியா அணியுடன் நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முரளி விஜய் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:

விராத் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ், பும்ரா, புவனேஷ்வர்குமார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close