உலகின் அழகான பெண்மணிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யுடன் ’தமிழன்’ என்ற படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானவர்.
இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ராவுக்கும் தீபிகா படுகோனுக்கும் யார் நம்பர் ஒன் என்பதில் எப்போதுமே போட்டி. பிரியங்கா ஹாலிவுட்டுக்குப் போனால், நாங்களும் போவோம்ல என்று தீபிகாவும் பிளைட் பிடித்தார் ஹாலிவுட்டு. இந்த ஆரோக்கிய போட்டி, அம்சமாகச் சென்றுகொண்டிருக்கிறது பாலிவுட்டில். அவர்களுக்குள் நிஜமாகவே போட்டியிருக்கிறதோ இல்லையோ, ரசிகர்கள் அதை தம் கட்டிக்கொண்டு ஒப்பிட்டு பார்க்கிறார்கள் சீரியசாக.இந்நிலையில் உலகின் அழகானப் பெண்கள் பட்டியலில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் பிரியங்கா.
யார் அழகான பெண்மணி என்ற கருத்துக் கணிப்பை, சமூக வலைத்தளம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. இதில் முதலிடத்தில் இருக்கிறார் பாப் ஐகான், பியான்ஸ். இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. இரண்டாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா வந்ததுதான் பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது. பிறகு, ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், நம்மூர் தீபிகா உட்பட பலரை பின்னுத்தள்ளியிருக்கிறாரே பிரியங்கா! இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் பிரியமான பிரியங்கா.
Loading More post
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு