ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் சார்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரேமலதா, “நான் பொருளாளராக இருந்தாலும் உங்களுக்கு என்றைக்கும் அண்ணியாக இருப்பேன். தேமுதிகவை குடும்பக்கட்சி என்று சொல்லி விடுவார்கள் என யாரும் பயப்பட வேண்டாம். அதற்காக நீங்கள் பதில் சொல்லவும் வேண்டாம். அதிமுக, திமுகவிற்கு மாற்றுக்கட்சியாக தேமுதிக உள்ளது.
இது விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி. மற்றவர்கள் ஆரம்பித்த கட்சியில், ஒரு குடும்பம் கட்சியாக மாற்ற வில்லை. 100 ஆண்டுகால காங்கிரஸ் கட்சிக்கே 8 சதவீத ஒட்டு வங்கி தான் உள்ளது. பிற கட்சியை போன்று லஞ்ச ஊழலில் கட்சியை வளர்க்கவில்லை. எதையும் எதிர்கொள்ளும் துணிவு எனக்கு உள்ளது. 24 மணி்நேரம் அவரை பார்ப்பதாக எனக்கு இருந்தது. சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிங்கமாக கேப்டன் வருவார். இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் மீண்டும் விஜயகாந்த். சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல உள்ளோம். அவருக்கு எந்த குறையும் இல்லை. இனி வரும் காலத்தில் அவரது தலைமையில் ஆட்சி வரும். பழைய கம்பீரத்துடன் அவர் வந்து பேசுவார்.
வரக்கூடிய தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல. சட்டப்பேரவை தேர்தலும் சேர்ந்து வர உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் நெருப்பு மாதிரி இருந்தால் மீ டூ எப்படி வரும். நாமே நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் உள்ள நம்பிக்கையை அவரவர் கடைப்பிடித்தால் போதும். தமிழகம் முழுவதும் பெண்கள் உள்ளனர். அவர்கள் தைரியமாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு பெண்ணாக சொல்கிறேன், பெண்கள் தங்களை உறுதியாக வளப்படுத்தி கொள்ள வேண்டும். மீ டு வை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால் சர்ச்சையாக மாற்றக் கூடாது. பெண்கள் தைரியமாக இருந்தால் எதுவும் நடக்காது என்று பிரேமலதா பேசினார்.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்