விராத் கோலி சிறந்த கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் திகழ்வதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடும் இவர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியின் நண்பர். அவர் அளித்த பேட்டி ஒன்றில் விராத் கோலியை பாராட்டியுள்ளார்.
அவர் கூறும்போது, ‘ விராத் கோலியும் நானும் ஐபிஎல்-லில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது ஒருவித கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது. போட்டியை அணுகும் விதத்தில் இரண்டு பேருக்குமே ஒரே மாதிரியான மனநிலை இருக்கிறது. இப்படி ஒரே மனநிலை கொண்ட இரண்டு பேர் புரிந்துகொண்டு விளையாடுவது மகிழ்ச்சியானது. அவருக்கு கால்பந்து வீரர் ரொனால்டோவை பிடிக்கும். அவரை அப்படியே விட்டுவிடுவோம். எனக்கு மெஸ்சியை பிடிக்கும்.
கேப்டன் ஆன பிறகு, கடந்த சில வருடங்களாக, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறார் விராத். அவர் சிறந்த கேப்டன். அதுதான் பயமான பகுதி. பேட்ஸ்மேனாகவும் அவர் சிறப்பாக முன்னேறியிருக்கிறார். அதுவும் பயங்கரமானதுதான். அவருக்கு சிறப்பான இடம் இருக்கிறது.
இங்கிலாந்து தொடரில் இந்திய அணி விளையாடியது பற்றி கேட்கிறார்கள். அந்த அணிக்கு கடுமையான போட்டியை இந்திய அணி அளித்தது என்பது உண்மை. ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என்றார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?