அதிமுகவிற்கு பிரதமர் மோடி ரிங் மாஸ்டர் போல் செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
இதனையடுத்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எடுத்து மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், பொடா, மிசா என பல வழக்குகளை சந்தித்த தங்களை, முதலமைச்சர் மிரட்டிப் பார்ப்பதாக கூறியுள்ளார். அதிமுக சர்க்கஸ் கூடாரமாக இருப்பதாகவும், ரிங் மாஸ்டராக பிரதமர் ஆட்டுவிப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். வழக்குத் தொடுப்பேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூச்சாண்டி காட்டுகிறார். மேலும் 2 ஜி விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!