தேனியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் சில மாதங்களாக மக்னா வகை காட்டு யானை ஒன்று சுற்றித்திரிகிறது. இந்த யானை அவ்வப்போது மக்களின் வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அத்துடன் காட்டு யானை விரட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வனத்துறை சார்பில் இரண்டு கும்கி யானைகள் தேவாரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. கலிம், மாரியப்பன் என்ற அந்த இரண்டு கும்கி யானைகளும், காட்டு யானையை விரட்டுவதற்காக சில நாட்கள் காத்திருந்தன.
ஆனால் கும்கி யானைகளின் வருகையை உணர்ந்துவிட்டதா என்று தெரியவில்ல, அதன்பிறகு காட்டு யானை அப்பகுதிக்கு வரவே இல்லை. இதனால் கும்கி யானைகள் இரண்டும் திருப்பி அனுப்பப்பட்டன. இதையடுத்து சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் காட்டு யானை ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தும் செயலை தொடர்ந்தது. இந்த முறை அந்த யானையால் ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் மக்கள் அச்சத்தில் உறைந்து, வருத்தம் அடைந்தனர். வனத்துறையிடம் காட்டு யானையை விரட்ட கோரிக்கையும் விடுத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்து வந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள வசீம், விஜய் என்ற அந்த இரண்டு யானைகளும் தற்போது காட்டு யானையின் வருகைக்காக காத்திருக்கின்றன. அவற்றுடன் வனத்துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
விஜய்க்கும், வசீமுக்கும் வயசாகுது !
முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் விஜய், வசீம் ஆகிய கும்கி யானைகள் மட்டுமே உள்ளன. இந்த யானைகள் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று யானைகளை விரட்டவும் பிடிக்கவும் உதவியுள்ளன. இந்தக் கும்கிகளுக்கும் வயதாகி வருவதால், சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடும். எனவே அடுத்த தலைமுறை கும்கி யானைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். முதற்கட்டமாக முதுமலையில் பராமரிக்கப்படும் பொம்மன், கிருஷ்ணா, ஸ்ரீநிவாசன் மற்றும் சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிரி ஆகிய குட்டி யானைகளுக்கு கும்கி பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளோடு சேர்ந்து கேரளாவிலிருந்து முதுமலைக்கு பயிற்சி பெற வந்த மூன்று யானைகளும் பயிற்சி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி