400 சிஆர்பிஎப் வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 400 பேர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

கேரளாவில் உள்ள பள்ளிபுரத்தில் மத்திய பாதுகாப்புப் படை முகாம் உள்ளது. இங்கு நேற்று இரவு உணவு சாப்பிட்ட சுமார் 400 வீரர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் சாப்பிட்ட மீன் உணவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பயப்பட தேவையில்லை என்று தெரிவித்த அவர்கள், அனுமதிக்கப்பட்ட வீரர்களில் பலர் பயிற்சி வீரர்கள் எனவும் கூறினர்.

சமீபத்தில் ராணுவ வீரர் ஒருவர், ஜவான்களுக்கு நல்ல உணவு அளிப்பதில்லை என்று புகார் கூறியிருந்த நிலையில் இந்தச் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement