காணாமல் போன பள்ளி மாணவன் : இளம்பெண்ணிடம் விசாரணை

Missing-school-student-in-tiruvarur

திருவாரூரில் பள்ளி மாணவன் காணாமல் போனது தொடர்பாக இளம்பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

திருவாரூரை சேர்ந்த சசிகுமார் என்பவரது மகன் ஹரிவசந்த். ஹரிவசந்த் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஹரி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இது குறித்து ஹரியின் பெற்றோர் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது வடக்கு வீதியில் ஹரி இளம்பெண் ஒருவருடன் பேருந்து நிலையம் நோக்கி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.


இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்ட அந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பள்ளி மாணவன் காணாமல் போன விஷயத்தில் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியிட்டனர்.இதனை அறிந்த அந்த இளம்பெண் திருவாரூர் நகர காவல் நிலையத்துக்கு இன்று காலை வருகை தந்தார். பள்ளி மாணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து விசாரித்தபோது பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என அந்த மாணவன் கூறியதாகவும், அதனால் பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement