வெளிப்படையாக டெண்டர் விடாமல் தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோல் இந்தியா நிறுவனத்திடமிருந்து ஒரு டன் நிலக்கரி ரூ.2 ஆயிரம் என்று வாங்கும் நிலையில், அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்க முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும் அரசின் மின்துறை செயலாளரும் எந்த அடிப்படையில் ஒப்புக்கொண்டார்கள்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலக்கரி இறக்குமதி பற்றிய தெளிவான கொள்கை மின்பகிர்மானக் கழகத்திடம் இல்லை என்று சி.ஏ.ஜி அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன்? என வினவியுள்ளார். நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Loading More post
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்