பெண் குழந்தைகள் தின வாழ்த்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்டவும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் 2011ஆம் ஆண்டு ஐ.நா சபையால் பெண் குழந்தைகள் தினம் உருவாக்கப்பட்டது. இந்த தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி பெண் குழந்தைகளுக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெண் குழந்தைகள் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் இருக்கையில் அவரது மகள் யெல்லா-க்ரேஸ் மார்கரேட் அமர்ந்துகொண்டு, அவருக்கு எதிரே உள்ள மேசையின் மீது காலை வைத்தப்படி ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். சுவரின் ஓரம் சாய்ந்துகொண்டு தனது போனை ஜஸ்டின் பார்த்துக்கொண்டிருக்கிறார். பெண் குழந்தைகளுக்கான சுதந்திரத்தை வெளிப்படுத்தும்படி, இந்த புகைப்படத்தை பெருந்தன்மையுடன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு ஜஸ்டின் பெண் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்