வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி : இந்திய அணி அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஆசியக் கோப்பையின் வெற்றியை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்த சீரியஸில் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.


Advertisement

இந்நிலையில் அக்டோபர் 21 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (து.கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, எம்.எஸ். தோனி (கீப்பர்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமத், ஷர்துல் தகூர், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement