டெல்லியில் , பட்டம் விட எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் சகோதரியை 19 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியைச்சேர்ந்த 19 வயது இளைஞர் சர்னாம் வெர்மா. சரியாக படிக்காததால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய சர்னாம் தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார். கல்லூரிக்கே செல்லாமல் எந்நேரமும் பட்டம் விட்டு விளையாடுவதையே வழக்கமாக கொண்டிருந்த சர்னாமை அவரது குடும்பத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சர்னாம், குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கத்தி, மற்றும் கத்தரிகோலை மறைமுகமாக வைத்திருந்து அதிகாலை 3 மணி அளவில் பெற்றோரின் அறைக்குள் நுழைந்து அவர்களை சரமாரியாக குத்தியுள்ளார். தந்தை மற்றும் தாயின் கழுத்திலும், மார்பிலும் மாறிமாறி குத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடனடியாக சகோதரியின் அறைக்குச் சென்ற சர்னாம் அவரையும் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார. பின்னர் கத்தியில் இருந்த கைரேகையை அழித்த சர்னாம், வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போட்டு கொள்ளை நடந்ததாக நாடகமாடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்களும், கைரேகை நிபுணர்களும் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கைரேகையை சர்னாம் அழித்தது கண்டிபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டார்.
பட்டம் விட எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தையே இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் டெல்லி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்