வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், புயலாக மாறியிருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு டிட்லி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் புயல் மேற்கு வடமேற்கே நகர்ந்து ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கோபால்பூர் இடையே 11-ஆம் தேதி காலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை11.30 மணி நிலவரப்படி கோபால்பூரில் இருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
டிட்லி புயலால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திர மாநில கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படியும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’!
“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்
6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை