பெற்றோரை கைவிட்ட மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் பெற்றோரை தவிக்கவிட்ட மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

2013ம் ஆண்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் ரான்சூட் சொலாங்கி என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் தங்களை மகன்கள் இருவரும் சரியாக கவனிப்பதில்லை. மாத செலவுக்கும், சாப்பாட்டிற்கும் அவர்கள் வழியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால் வயதான தங்களுக்கு மாதமாதம் நிதி உதவி தருமாறு மகன்களுக்கு உத்தரவிட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் நீதிமன்றம் வயதான பெற்றோருக்கு இரண்டு மகன்களும் மாதமாதம் தலா ரூ.1800 வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தயாபாய் என்ற மகன் பின்பற்றிய நிலையில் மற்றொரு மகனான கான்சி என்பவர் பின்பற்றவில்லை. 


Advertisement

நீதிமன்ற உத்தரவின் படி தங்களுக்கு நிதி உதவி வராததால் 2015ம் ஆண்டு ரான்சூட் சொலாங்கி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் அவமதித்த குற்றத்திற்காக கான்சிக்கு ரூ.49,000 அபராதமும்,  4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இது குறித்து பேசிய ரான்சூட்டின் வழக்கறிஞர், ரான்சூட்டின் மகன் கான்சி நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் தவிர்த்து வந்தார். இது குறித்து அனுப்பப்பட்ட நீதிமன்ற நோட்டீஸ்களுக்கும் அவர் தகுந்த பதில் அளிக்கவில்லை. அதனால் மீண்டும் நீதிமன்றத்தை நாடினோம் என்று தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement