தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக 20 சதவீதம் விற்பனை சரிவடைந்திருப்பதாக தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரத்து 847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் 10 முதல் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 3 கோடியே 22 லட்சம் லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் விலை உயர்வு காரணமாக கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளதாகம் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2017 முதல் பெட்ரோல், டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக 16 ரூபாய் உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களில் குறிப்பிட்ட விகிதத்தினர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், விலை உயர்வுக்கு பிறகு அவர்களில் சிலர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு
ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்
அடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?
அரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு