பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடியின் பிளான் இதுதான்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


Advertisement

சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், வேணுகோபால் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார். பின்னர் 10.40 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க அவர் வலியுறுத்த இருக்கிறார். இதுவரை வழங்கப்படாத பேரிடர் நிவாரண பணிகளுக்கான நிதி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்குமாறும் முதலமைச்சர் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிருந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக எம்பிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். துணை சபாநாயகர் தம்பிதுரை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சாகேத் என்ற இடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி செல்லவுள்ளார். அங்கு அதிமுக அலுவலகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதனை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிடவுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement