கணவர் தற்கொலை செய்ததை அறிந்த மனைவி தானும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே கணவன்- மனைவி என்ற உறவு ஆத்மார்த்தமான உணர்வுகளுள் ஒன்றானது. ஆயிரம்பேர் கூட்டத்தில் இருந்தாலும் தன் கணவர் என்ன செய்கிறார் என்பதை மனைவியின் கண்கள் அறியும். பார்த்தும் பார்க்காதுபோல் இருந்தாலும் மனைவியின் மனதை புரிந்து வைத்திருப்பார் கணவர். அப்படிப்பட்ட கணவர் தற்கொலை செய்த காரணத்தினால் துக்கம் தாங்காத மனைவி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கம்பக்கத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சுதாகர். 65 வயதான இவர் திருப்பதியில் வசித்து வந்தார். இந்நிலையில் திருப்பதி ரேணிகுண்டா அருகே ரயில் தண்டவாளத்தில் சுதாகர் சடலமாக கிடந்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே இறப்பதற்கு முன் தன் சாவுக்கு யாரும் காரணமில்லை என சுதாகர் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
சுதாகர் இறந்தது தொடர்பான செய்தியை அவரது மனைவி வரலட்சுமியிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். உடனே துடிதுடித்து போன வரலட்சுமி சம்பவ இடத்திற்கு ஓடியுள்ளார். அங்கே கணவர் சடலமாக இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சோகத்தில் கண்ணீர்மல்க வரலட்சுமி நின்றுகொண்டிருந்த நேரத்தில் அருகே உள்ள தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்த வரலட்சுமி தானும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை