மோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடைகிறது. ஆகையால், அம்மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பரில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. 


Advertisement

இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புகள் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தெலங்கானா சட்டபேரவைக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவற்றுடன் தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையரின் செய்தியாளர் சந்திப்பு மாலை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்காக தேர்தல் அறிவிப்பை ஆணையம் தள்ளி வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்வாலா, “பிரதமர் மோடி 1 மணிக்கு ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், மாலை 3 மணிக்கு தேர்தல் அறிவிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதான் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமா?” என விமர்சித்துள்ளார்.


Advertisement

                 

அதாவது, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அந்த மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துவிட்டார் புதிய திட்டங்கள் எதனையும் அறிவிக்க முடியாது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement