4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவுள்ளது. 


Advertisement

2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்று ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். 2014 மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்களில் ஆளும் பாஜக வெற்றி வாகை சூடி வந்தது. இதனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20ஐ தாண்டியது. காங்கிரஸ் கட்சியின் பலம் சரிந்தது. 

இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தெலுங்கானா அரசை முதல்வர் சந்திர சேகர் ராவ் கலைத்துள்ளதால் அந்த மாநிலத்திற்கான தேர்தலும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இன்றைய அறிவிப்பின் போதே, 4 மாநில தேர்தல்களுடன் சேர்த்தே நடத்தப்படுமா, அல்லது தனியாக நடத்தப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்படும்.


Advertisement

அடுத்த மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல்களின் முடிவுகளை பொறுத்தே கூட்டணிகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான மாநிலங்களிலே ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  

loading...

Advertisement

Advertisement

Advertisement