[X] Close

விஜய்யின் அரசியல் ஆசையில் தவறில்லை - கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜயின் அரசியல் நுழைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 


Advertisement

‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய், பல அரசியல் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் கூறி இருந்தார். குறிப்பாக ‘நிஜத்தில் முதலமைச்சரானால் நான் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்’என்று  குறிப்பிட்டிருந்தார். 

அந்தக் கருத்தை அதிமுக வட்டத்தினர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர். அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதனால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்’ என்றும் கூறியிருந்தார். 


Advertisement

இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக மக்கள் நீதி மன்ற மையத் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலுக்கு வருவது குறித்த விஜய்யின் ஆசையில் தவறில்லை. ஊழலுக்கு எதிரான தன்னுடைய கருத்தினை அவர் ஊர்ஜீதப்படுத்திவிட்டால், என்னுடைய சகோதர மனப்பான்மையில் வரவேற்பேன்” என்றார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement