[X] Close >

கேரளாவில் கனமழை : மக்கள் அச்சம்

Kerala-RainFall-is-Continuing-Three-days

வானிலை முன்னறிவிப்பை மெய்ப்பிக்கும் விதமாக கேரள மாநிலம் முழுவதும் பரவலாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.


Advertisement

இந்திய வானிலை மைய அறிவிப்பை மெய்ப்பிக்கும் விதமாக கேரள மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியார். கட்டப்பனை, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இன்று காலை வரையும் தொடர்ந்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து கேரள அரசால் இன்று மூன்று மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” என்ற உச்சகட்ட எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இடைவிடாத கன மழையாக பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை கேரள மக்களை கலக்கம் அடைய செய்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close