ரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார்!

Sasikumar-is-doing-cameo-in-Petta

ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்


Advertisement

‘காலா’ மற்றும் ‘2.0’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் ’பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாஸூதின் சித்திக், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் டார்ஜிலிங்கில் நடந்தது.


Advertisement

அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு லக்னோவில் நடந்தது. இப்போது வாரணாசியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் ஏற்கனவே, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தப் படத்திலும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement