20 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்பதை குறிப்பிடவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் வெள்ளம் ஏற்பட்ட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என வருவாய் நிர்வாக அணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் ஆபத்து இருக்கும் என மக்கள் நினைக்க வேண்டாம். அதிக, மிக அதிக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்புள்ளதை குறிக்கவே ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் ” என தெரிவித்தார்.
இதேபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறும்போது, “ 20 செ.மீட்டருக்கும் அதாவது 200 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்வதையே மிக மிக கனமழை என சொல்கிறோம். 20 செ.மீ அதிகமாக மழை பெய்ய உள்ளதை குறிப்பதற்காகவே ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று சொல்லிவிட முடியாது. குறிப்பாக எந்த பகுதியையும் அவர்கள் சுட்டிக்காட்டவில்லை. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 7-ஆம் தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யலாம்.
சென்னை மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை போன்று ஏற்பட்டு விடுமோ என பயப்படத் தேவையில்லை. ஒருநாள் மழையில் வெள்ளம் வந்துவிடாது. தமிழகத்தின் அனைத்து ஏரிகளிலும் நீர் குறைவான நிலையிலேயே உள்ளன. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளிலும் குறைவான அளவிலேயே நீர் இருப்பு உள்ளன. எனவே மழை அதிகம் பெய்யும்பட்சத்தில் ஏரிகளின் நீர் இருப்பு அதிகமாக இருக்குமே தவிர வெள்ளம் வர வாய்ப்பே இல்லை. மழை நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்குவதை வெள்ளம் என சொல்லமுடியாது. நாளைக்கும் கடலோர மாவட்டங்களில் மழை இருக்கும். அரபிக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி விலகிச் செல்கிறது. எனவே தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிக மிக கனமழை இருக்கும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையுடன் இருந்தால் போதும். பயப்பட தேவையில்லை” என்றார்.
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி