வட்டி பணத்திற்காக குழந்தையும் பாட்டியும் கடத்தியவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவண்ணாமலையில் கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை எனக்கூறி 2 மாதக் குழந்தையையும், பாட்டியையும் கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

4ஆவது கோபுரத் தெருவில் வசிக்கும் பாரதி, அதே தெருவில் வசிக்கும் மணிகண்டன் எ‌ன்பவரிடம் ஓராண்டிற்கு முன்பு 38 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். அதற்கு மாதா மாதம் வட்டியும் செலுத்தி வந்த நிலையில், ‌நிலுவையில் 80 ஆயிரம் ரூபாய் இருப்பதாகக்கூறி பாரதியின் 2 மாதக் குழந்தையையும், அவரது பாட்டியையும் மணிகண்டன் கடத்திச் சென்றிருக்கிறார். கடத்தப்பட்டவர்களை மணிகண்டன் தனது வீட்டின் தனியறையில் அடைத்து வைத்திருக்கிறார். 

பாரதியும் அவரது கணவரும் கடனை திரும்பிச் செலுத்த தவணை கேட்டு‌ மன்றாடியும் குழந்தையை விடுவிக்காததால் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தை மற்றும் பாட்டியை மீட்டு பாரதியிடம் ஒப்படைத்ததோடு, மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement