ஆர்டிஐ வரம்புக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்!

ஆர்டிஐ வரம்புக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்!
ஆர்டிஐ வரம்புக்குள் வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் மத்திய தகவல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை, பிசிசிஐயின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர முகாந்திரம் இருந்ததால், இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறும்போது, ’இந்திய கிரிக்கெட் வீரர்களை எந்த அடிப்படையில் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்கிறது, எந்த வழிகாட்டுதல் முறையில் பிசிசிஐ, இந்திய அணியை விளையாட வைக்கிறது என்று கீதா ராணி என்பவர்  கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சரியான பதிலை அளிக்கவில்லை. மத்திய தகவல் ஆணையத்தில் கீதா மேல்முறையீடு செய்தார். இதில் ஆய்வு செய்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணைய அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை, கிரிக்கெட் வாரியத்தில் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கொண்டு வருவ தற்கான வாய்ப்புகள் இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மனுக்களை ஆன்லைன் மற்றும் நேரடியாக பெறுவதற் கான நடவடிக்கைகளை 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும்’  என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம், ’தாங்கள் தனியார் அமைப்பு என்றும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது, கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாது’ என்றும் இதுவரைத் தெரிவித்து வந்தது. இனிமேல் அப்படி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com