பிரபல நடிகர் ராஜ்கபூர் மனைவி மரணம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல இந்திய நடிகர் ராஜ்கபூரின் மனைவியும் இளம் ஹீரோ ரன்பீர் கபூரின் பாட்டியுமான கிருஷ்ணா கபூர் மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.


Advertisement

பிரபல மறைந்த இந்தி நடிகர் ராஜ்கபூர். இவரது மனைவி கிருஷ்ணா கபூர். முதுமை காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

மறைந்த ராஜ்கபூர்- கிருஷ்ணா கபூர் தம்பதிக்கு ரன்ந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர் என்ற மகன்களும் ரிது கபூர், ரிமா கபூர் என்ற மகள்கள் உள்ளனர். மகன்கள் மூன்று பேரும் சினிமாதுறையில் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என கொடி கட்டி பறந்தவர்கள். இந்தி சினிமாவில் இப்போதும் கபூர் குடும்பம் முக்கியமானது. 

ரன்ந்தீர் கபூரின் மகள்கள் பிரபல நடிகைகளான கரீஷ்மா கபூர், கரீனா கபூர். ரிஷி கபூரின் மகன் பிரபல இளம் ஹீரோ ரன்பிர் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement