பிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்

Cristiano-Ronaldo-accused-of-rape--lawyers-issue-denial--Reports

பிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.


Advertisement

உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ, 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி வந்தார். கடந்த 9 ஆண்டுகளில், அந்த அணிக்காக 451 கோல்களை அடித்து, அந்தக் கிளப் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் மாட்ரீட்
அணியிலிருந்து விலகி, இத்தாலியின் பிரபலாமான கிளப்பான ஜூவாண்டஸ் அணியில் இணைந்தார். ஜூவாண்டஸ் அணி, அவரை சுமார் 100 மில்லியனுக்கு  4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.


Advertisement


இந்நிலையில் இந்த கால்பந்து ஹீரோ மீது காத்ரின் மயோர்கா என்ற 34 வயது பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஓட்டல் அறை ஒன்றில், 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுபற்றி வெளியே வாயைத் திறக்காமல் இருக்க எனக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலரையும் அவர் கொடுத்தார் என்று புகார் கூறியுள்ளார். இந்த புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆனால் இதை ரொனால்டோவின் வழக்கறிஞர் செர்ட்ஸ் பெர்க்மான் மறுத்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement