நானா படேகர் மற்றும் தனுஸ்ரீ தொடர்பான கேள்விக்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
2005ஆம் ஆண்டு வெளியான ஆசிக் பனாயா ஆப்னே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமான இவர், தமிழில் நடிகர் விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகர் நானா படேகர் மீது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஹார்ன் ஒகே ப்ளீஸ்" என்ற திரைப்பட படப்பிடிப்பின்போது, நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தாக்குதலில் ஈடுபட்டார் என தனுஸ்ரீ மவுனம் கலைத்துள்ளார்.
பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் அண்மையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சினிமாவில் தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருவதன் மூலம், சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுள்ள நானா படேகர் மீது கூறப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு தான் தற்போதைய பாலிவுட்டி சினிமாவின் ஹாட் டாக். நானா படேகர் யார் ? அவரது பின்புலம் என்ன ? அவர் எத்தைனை பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் ? என்பது திரைத்துறையினருக்கும் தெரியும் என குற்றச்சாட்டுகளை தனுஸ்ரீ அடுக்கியுள்ளார்.
இதுகுறித்து ஊடங்களில் எந்த செய்திகளும் வெளியிடப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தி வெளியானதும், தனுஸ்ரீ கவர்ச்சியாக நடித்த திரைப்படங்களை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அவர், திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்ததால், தானும் அதேபோல் தான் இருப்பேன் என்ற முன்முடிவுக்கு வருவது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார். இவை அனைத்திற்கும் நானா படேகர் என்ன பதில் கூறப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமிதாப், ‘எனது பெயர் நானா படேகரும் இல்லை. தனுஸ்ரீயும் இல்லை. பின்னர் இந்த கேள்வி நான் எப்படி பதில் சொல்ல முடியும்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Loading More post
நெல்லை: அணைகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு; தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்தது!
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு