விஜய் ஹசாரே போட்டி: விஜய் சங்கர் அபார சதம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில், தமிழக வீரர் விஜய் சங்கர் அபார சதம் அடித்தார்.


Advertisement

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இப்போது நடந்து வருகிறது. சென்னையில் நேற்று நடந்த லீக் ஆட்டதில் தமிழ்நா டு- அஸாம் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப் புக்கு 334 ரன்கள் குவித்தது.


Advertisement

அதிகபட்சமாக விஜய் சங்கர் 99 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 129 ரன்னும் கேப்டன் பாபா இந்திரஜித் 72 பந்துக ளில் 92 ரன்னும் அபினவ் முகுந்த் 78 பந்துகளில் 71 ரன்னும் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 

பின்னர் 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அஸாம் அணி, 44.1 ஓவர்களில் 204 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டை யும் இழந்தது. இதையடுத்து தமிழக அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அஸாம் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரியான் பராக் 45 ரன்னும், வாஷிஹூர் ரஹ்மான் 43 ரன்னும், கோகுல் ‌சர்மா 42 ரன்னு ம் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement