JUST IN

Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு என 19 பேருக்கான அரசுப் பணி ஆணைகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடுபத்திற்கு அரசுப்பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப்பணி ஆணையை முதலமைச்சர் வழங்கினார். பத்து பேரின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 3 பேரின் குடும்பங்களில் ஒருவர் அரசுப்பணி வேண்டா‌ம் எனத் தெரிவித்ததாகவும், மற்ற இரு குடும்பங்களில் சிறுவர்கள் உள்ளதால், தற்போது அரசுப் பணி வழங்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டோரில் 9 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். மொத்தமாக 19 பேருக்கும் அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அப்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உடனிருந்தனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement