‘சிம்டாங்காரன்’ அவதாரத்தில் ‘சர்கார்’ விஜய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் ஒரு பாடல் நாளை மாலை வெளியிடப்படுகிறது.


Advertisement

மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ’சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதையடுத்து அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

‘சர்கார்’ படத்தினர் சிங்கிள் டிராக் வரும் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில் பாடலின் தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, நாளை வெளியாகவுள்ள பாடலுக்கு பெயர் ‘சிம்டாங்காரன்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் நடித்துள்ள நையாண்டி பாடலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சிம்டாங்காரன் என்ற வார்த்தை தமிழில் இல்லை. அதனால் இது தற்போதைய காலகட்டத்தில் வெளியாகும் ‘நையாண்டி வார்த்தைகளுள்’ ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த வார்த்தையை எடுத்துக்காட்டாக பார்த்தோம் என்றால், ‘கண்ணை சிமிட்டும் நபர் = சிம்டாங்காரன்’ என இருக்கலாம் நினைக்கத்தோன்றுகிறது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement