சாலைகளில் கார் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையிலும், பொதுபோக்குவரத்தை ஊழியர்கள் பயன்படுத்தும் வகையிலும் சென்னை மெட்ரோ நிறுவனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
சென்னை மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஊழியர்களும் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்ல இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். அல்லது கார்களை பயன்படுத்துகின்றனர். இதனாலும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் சாலைகளில் கார் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையிலும், பொது போக்குவரத்தை ஊழியர்கள் பயன்படுத்தும் வகையிலும் சென்னை மெட்ரோவுடன் கை கோர்த்துள்ளது மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம்.
இதன்படி சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்று இன்ஃபோசிஸ் ஊழியர்களை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த முயற்சி குறித்து சென்னை மெட்ரோ நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கூறும்போது, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும்காலங்களில் சோழிங்கநல்லூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கும் இந்த வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது என்றார்.
எனினும் இன்ஃபோசிஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல்முறையாக இந்த முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் அது தொடரும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் பணியாற்றும் இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் கூறும்போது, உண்மையிலே இந்தத் திட்டம் சிறப்பானது என்றார். ஏற்கனவே போரூரில் உள்ள டிஎல்எஃப் நிறுவனத்துடன் இதேபோன்று சென்னை மெட்ரோ ஒப்பந்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Courtesy: TheHindu
Loading More post
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை