[X] Close >

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி

Nagercoil-municipality-will-upgrade-corporation---TN-Chief-minister-palaniswami

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 


Advertisement

நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். எல்லை சீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்த பின்னர் நகராட்சியாக உள்ள நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என்றார். இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக முதல்வர் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நாகர்கோவில் 13ஆவதாக உருவாகிறது. 

முதலமைச்சர் பழனிசாமியின் மேலும் சில அறிவிப்புகள்:-


Advertisement
  • சுற்றுலா பணிகள் வசதிக்காக கன்னியாகுமரியில் மேலும் இரண்டு படகுகள் வாங்கப்படும்
  • ரூ120 கோடி செலவில் விவேகானந்தர் பாறைக்கு பாலம் அமைக்கப்படும்
  • கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் 150 ஆக உயர்த்தப்படும்
  • இனையம் கிராமத்தில் தூண்டில் பாலம் அமைக்கப்படும்
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close