சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவுக்கு, இந்தியாவில் இருந்து ’வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாமிய படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரிமா தாஸ் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள அசாம் மொழி படம், ’வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தில் பனிதா தாஸ், மனபென்ட்ரா தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். தேசிய விருதுகள் மட்டுமின்றி பல்வேறு பட விழாக்களிலும் விருதுகளை வென்றுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 91ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத், தப்ரேஸ் நூரானி இயக்கத்தில் வெளியான லவ் சோனியா, நந்திதா தாஸ் இயக்கிய மண்டோ உள்ளி ட்ட 28 படங்களில் இருந்து இந்தப் படத்தை எஸ்.வி. ராஜேந்திர சிங் பாபு தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது. இந்தியத் திரைப்படச் சம் மேளனம் (FFI) இதைத் தெரிவித்துள்ளது.
ஜூரி உறுப்பினரும் இயக்குனர் மற்றும் நடிகருமான ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ‘இந்தப் படம் சர்வதேச தரத்துக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்வது பெருமையாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!
'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய அரசு அறிவுறுத்தல்
"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்" - மத்திய அரசு
கொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி