பாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளார். 


Advertisement

இதற்கு முன்பு 2017ம் ஆண்டு  ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் ஜடேஜா விளையாடினார். ஓராண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் இப்போது தான் அவர் களமிறங்குகிறார். முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. லிடன் தாஸ் 7, ஹுசைன் ஷண்டோ 7, ஷகிப் அல் ஹாசன் 17 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். புவனேஸ்வர் குமார், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். வங்கதேசம் அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

அதேபோல், ஆசியக் கோப்பையில் தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில், டாஸ் வென்ற ஆப்கான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது. அந்த அணி 15 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement