பங்களாதேஷூக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில், பங்களாதேஷூக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.


Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தி யா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இரண்டு லீக்கிலும் தோல்வியடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.


Advertisement

சூப்பர்-4 சுற்று இன்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி, பங்களாதேஷை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் ஹாங்காங்கையும் பாகிஸ்தானையும் வென்றை இந்திய வீரர்கள், பங்களாதேஷை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர், ஷர்துல் தாகூர் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற, ஜடேஜா, சித்தார்த் கவுல், தீபக் சாஹர் அணியில் இணைந்திருக்கிறார்கள். இன்றைய போட்டியில் பாண்ட்யாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அல்லது மணீஷ் பாண்டே சேர்க்கப் படுவார் எனத் தெரிகிறது. 

உத்தேச அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா அல்லது மணீஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சேஹல், பும்ரா.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement