தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீண்டும் சிம்புக்கு எதிராக புகார் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.
சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் நஷ்டமானதாக கூறி கடந்த வருடம் டிசம்பர் மாதம் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மொத்தம் 60 நாட்கள் தன் படத்திற்கு சிம்பு கால்ஷீட் கொடுத்திருந்ததாகவும் ஆனால் வெறும் 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்ததாகவும் ஆகவே படத்திற்கு தேவையான காட்சிகளை சரிவர எடுக்க முடியவில்லை. இதனால் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமாகிவிட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதன் பிறகு ஒரு ஆடியோ விழாவில் பேசிய சிம்பு அவர் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தார்.
மைக்கேல் ராயப்பனின் புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு எதிராக ‘செட் நோட்டீஸ்’ போட்டிருந்தது. அதையொட்டி சிம்பு தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் சிம்புவுக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக சிம்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி அதில் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
சிம்பு தன் பழைய நிலையில் இருந்து மாறி மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது. ஆகவே இந்தத் தருணத்தில் மீண்டும் புகார் அளித்திருப்பதால் பிரச்னை பெரியதாக வெடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Loading More post
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி