பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் தேதி சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழிசையிடம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ ஓட்டுநர் கதிர் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, பாஜகவினர் சிலர் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலைத்தளங்களில் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பலர் கருத்திட்டு வந்தனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் கதிர் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழிசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனிப்பு வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார். தான் மது அருந்திவிட்டு கேள்வி கேட்க சென்றதாக கூறுவது தவறு என தெரிவித்துள்ள கதிர், பாஜகவினர் தாக்கியது தமிழிசைக்கு தெரியாது என்றும் தெரிவித்தார். தமிழிசை தன்னை வந்து சந்தித்தபோது பாஜகவினர் தாக்கியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதாகவும் ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.
Loading More post
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!