[X] Close >

ரகசியமாக கசிந்த அஜித்தின் ‘விஸ்வாசம்’ சண்டைக்காட்சி

Ajith-s-fight-moments-in--Viswasam--leaked

சமூக வலைத்தளத்தில் அஜித் படத்தின் சண்டைக்காட்சிகள் ரகசியமாக கசிந்துள்ளது. 


Advertisement

அஜித் நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரிலர் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டணி சேர்ந்துள்ளார். 

இந்தப் படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் இளம் அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர் தற்சமயம் அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை எடுத்து வருவதாக கூறப்பட்டது. மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வைத்து படமாக்கி வருகிறது படக்குழு. இதில் தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா இணைந்திருந்தார். 


Advertisement

இந்நிலையில் அஜித்துடன் வில்லன் ரவி அவானா மோதம் காட்சிகள் சம்பந்தமான புகைப்படங்கள் திடீரென்று கசிந்துள்ளது. வெள்ளை வேஷ்டி சட்டையில் இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்ட கூண்டிற்குள் இக்காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தக் காட்சிகளை படக்குழுவிற்கு தெரியாமல் யாரோ சமூக வலைத்தளத்தில் கசிய விட்டுள்ளனர். இதனால் தயாரிப்பாளர் தரப்பு மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கசிந்த அஜித் படங்களை அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் மூலம் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை இமான் பெற்றுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இதனை தயாரித்து வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close