“ரவிசாஸ்திரி கமெண்ட்ரி சொல்லதான் சரிபடுவார்” - முன்னாள் வீரர் பஞ்ச்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் என முன்னாள் வீரர் வலியுறுத்தியுள்ளார். 


Advertisement

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட்டில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் மோசமாக தொடரை இழந்தது. டெஸ்ட் தொடரின் தொடக்கம் முதலே இந்திய அணி சொதப்பலாக விளையாடியது. பேட்டிங்கில் பெரும்பாலும் கேப்டன் விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை. சில நேரங்களில் இங்கிலாந்து அணியின் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடியாமல் பந்துவீச்சாளர்களும் திணறினர். இந்திய அணி படுதோல்வி அடைந்ததோடு, சில போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் விக்கெட் சரிவே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 

          


Advertisement

இங்கிலாந்து தொடரில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ரசிகர்கள் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகன் ரவிசாஸ்திரியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

“ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பாக ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ரவிசாஸ்திரி சிறந்த வர்ணனையாளர். அவரை கமெண்ட்ரி செய்ய அனுமதிக்க வேண்டும். இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். இரு அணிகளும் சிறப்பாக விளையாடினலும், முடிவு இங்கிலாந்து அணி பக்கமே இருந்துள்ளது. அதனால், ஆட்டத்தை முடிக்கும் திறன் குறித்து ஆய்வதில் தோற்றுவிட்டோம். 

தற்போதைய இந்திய அணிதான் சிறந்த வெளிநாட்டு பயணங்களுக்கான அணி என்று ரவிசாஸ்திரி சொன்னதை நான் ஏற்கவில்லை. 1980களில் இருந்த அணிதான் சிறந்த அணி” என்றார். 


Advertisement

        

வீரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி ஆகிய முன்னாள் வீரர்கள் வரிசையில் தற்போது சேட்டன் சவுகன் ரவிசாஸ்திரியை விமர்சித்துள்ளார். சேட்டன் சவுகன் இந்திய அணிக்காக 1969 முதல் 1981ம் ஆண்டு வரை விளையாடியவர். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 2,084 ரன்கள் சேர்த்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement