ரூ.35க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் - பாபா ராம்தேவ் அதிரடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இயற்கை வழி வாழ்க்கை என்ற கோஷத்தை தொடர்ந்து கூறி வருபவர். டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவி யின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாபா ராம்தேவ் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். 


Advertisement

Read Also -> “என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட்டுடைத்த அம்ருதா..! 


Advertisement

ராம்தேவ் பேசும்போது “மோடியின் கொள்கைகளை பலரும் பாராட்டுகிறார்கள், ஆனால் சிலவற்றில் மாற்றம் தேவை, அதிகரிக்கும் விலைவாசி மோடி அரசை கண்டிப்பாக பாதிக்கும், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும், அதே நேரத்தில் இந்தியாவை தூய்மைப்படுத்துவதற்கான பல வேலைகளை பிரதமர் செய்து வருகிறார்” என புகழாரம் சூட்டினார். 

Read Also -> விஜய் மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் 


Advertisement

பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பிய போது “மத்திய அரசு விரும்பினால், ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.35க்கு விற்க நான் தயாராக உள்ளேன், சில வரிச் சலுகைகள் மட்டும் தர வேண்டும், இதனை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால், மக்களின் இருப்பு காலியாகி விடக் கூடாது. அதே நேரத்தில் பெட்ரோல் , டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தாலும் வரிச் சதவீதத்தை 28 ஆக நிர்ணயிக்க கூடாது” என்றார். 

Read Also -> கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய காங்கிரஸ்

பாஜக ஆதரவாளராக அரசியலில் செயல்படுகிறீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராம்தேவ் “ நான் அரசியலை விட்டு விலகி நாட்கள் ஆகி விட்டது, யாருக்கும், எந்த கட்சிக்கும் ஆதரவாக நான் செயல்படுவதில்லை, அனைத்து அரசியல் கட்சிகளோடும், தலைவர்களோடும் இணைந்தே செயல்படுகிறேன்” என்றார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement