[X] Close >

அறிமுக இயக்குனருடன் இணைகிறார் விஜய் சேதுபதி!

Vijay-sethupathi-team-up-with-New-director

’நிற்கவே நேரமில்லை’ என்பார்களே, அப்படித்தான் இருக்கிறார் விஜய் சேதுபதி! இன்றைய தேதியில் அதிக பிசியான ஹீரோ அவர்தான். மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ’செக்கச் சிவந்த வானம்’ முடிந்துவிட்டது.


Advertisement

அடுத்து ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கும் ’96’ படமும் ரெடி. பாலாஜி தரணிதரனின் ’சீதக்காதி’, தியாகராஜன் குமாரராஜாவின் ’சூப்பர் டீலக்ஸ்’, தெலுங்கில் சிரஞ்சீவியின் ’சை ரா நரசிம்ம ரெட்டி’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் ’பேட்ட’ என பறக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்தும் காத்திருக்கிறது அரை டஜன் படங்கள்.

Read Also -> ’நீதி வேண்டும்’: பிஷப்புக்கு எதிரான போராட்டத்துக்கு மஞ்சுவாரியர் ஆதரவு! 


Advertisement

Read Also -> 'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ?' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்  

டாப் ஹீரோக்கள், இயக்குனர்கள் படங்களுக்கு இடையே அறிமுக இயக்குனர் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி! அந்தப் படத்தின் கதையை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிற விஜய் சேதுபதி, படத்தின் கேரக்டருக்காக தனது தோற்றத்தையும் மாற்ற இருக்கிறார் என்கிறார்கள். அந்த அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்கு னராக பணியாற்றியவர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close