விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆடைகள் பெங்களூருவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதற்கேற்ப அதற்கான வேலைகளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் விண்வெளிக்க செல்ல உள்ள வீரர்களுக்காக பிரேத்யகமாக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள ஆடைகள் பெங்களூருவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த ஆடைகள் பெங்களூருவில் நடைபெற்று வரும் விண்வெளி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Read Also -> ’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்? மலரும் நினைவுகளில் பாரதிராஜா!
Read Also -> ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை?.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..?
இந்த ஆடையில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளது. இதன்மூலம் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சுமார் 60 நிமிடங்கள் சுவாசிக்க முடியும். 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில் இரண்டு உடைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒருவருக்கான ஆடை தயார் செய்யப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி விண்வெளி ஆராய்ச்சி குழுவிற்கான கேப்ஸ்யூல் மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்சி குழுவிற்கான கேப்ஸ்யூல் முலம் 3 விண்வெளி வீரர்கள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400 கி.மீ சுற்றுப்பாதையில் சுமார் 5 முதல் 7 நாட்கள் இருப்பார்கள். கேப்ஸ்யூலில் ஒரு வெப்ப கவசமும் இடம்பெற்றிருக்கும். இந்த வெப்ப கவசமே கேப்ஸ்யூலின் வெப்பநிலையை சுமார் 25 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க உதவும். அதேமசயம் விண்வெளி வீரர் கதவுகள் மூலம் தீப்பிழம்புகளை காண முடியும். கேப்ஸ்யூல் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் பூமியை சூழலும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் விண்வெளி வீரர்களால் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவை காண முடியும்.
Read Also -> நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
மூன்று விண்வெளி வீரர்களுடன் கேப்ஸ்யூல் பூமியின் மேற்பரப்பில் இருந்து 400 கீ.மீ தொலைவுள்ள சுற்றுப்பாதையை அடைய சுமார் 16 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. அதேசமயம் மீண்டும் பூமிக்கு திரும்பிவர 36 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களில் கேப்ஸ்யூல் பயன்படுத்தப்படும். விண்வெளியில் இருந்து திரும்ப வரும் போது, பூமியில் இறங்குவதற்கும் இந்த கேப்ஸ்யூல்தான் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?