வடகொரியாவில் 100 சதவீதம் எழுத்தறிவு - இந்தியாவில்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

1965ம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, ஆண்டு தோறும் செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படும் என யுனஸ்கோ அறிவித்தது. அதன்படி 1966ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டில் 15 வயதிற்கு மேல் உள்ளவர்களில் எத்தனை பேர் எழுத, படிக்க தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் எழுத்தறிவு சதவீதம் கணக்கிடப்பட்டு வருகிறது.


Advertisement

         

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. 1900 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டில் உள்ளவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். அதிலும், ஆண்களே பெரும்பாலும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். எழுத்தறிவு பெற்ற பெண்களின் சதவீதம் ஒன்றை கூட தாண்டியிருக்கவில்லை. பெண்கள் படிப்பதற்கான வாய்ப்பு அப்பொழுது பெரிதாக இல்லை. ஆண்களிலும் கூட சாதிய அடிப்படையில் உயர்நிலையில் இருப்பவர்களுக்கே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1947ம் ஆண்டு நாடு விடுதலை அடையும் பொழுது கூட எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் 12 என்ற அளவில் தான் இருந்தது. 


Advertisement

           

நாடு விடுதலை அடைந்த பின்னர் மத்தியில் மற்றும் மாநில அளவில் அமைந்த அரசுகள் மக்களுக்கு எழுத்தறிவு கொண்டு செல்ல தீவிரமாக முயன்றனர். அதற்காக பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டது. ஏழைகள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் எழுத்தறிவு பெற முன்னுரிமை தரப்பட்டது. இதனால், எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் கிடுகிடுவென உயர்ந்தது. முதலில் கற்றுக் கொள்வதற்காக எழுத்தறிவு அளிக்கப்பட்டது. 1990 ஆண்டுகளில் இந்தியா 50 சதவீதம் எழுத்தறிவை எட்டியது. 

2001ம் ஆண்டு சென்செக்ஸ் கணக்கின்படி எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் 65. 2011ம் ஆண்டில் இது 74 சதவீதமாக உயர்ந்தது. நாட்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களில் தொடர்ந்து கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கேராளாவில் 93.9 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். கேரளாவை அடுத்து லட்சத் தீவுகள் 92.3, மிசோரம் 91.6, திரிபுரா 87.8, கோவா 87.4 சதவீதம் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாட்டிலே குறைவான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகார் உள்ளது. பீகாரில் 64 சதவீதம் மக்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர். 


Advertisement

          

உலக அளவில் எடுத்துக் கொண்டால் எழுத்தறிவு சதவீதம் 86 ஆக உள்ளது. இதில் வடகொரியா கிட்டதட்ட 100 சதவீதம் எழுத்தறிவுடன் முதல் இடத்தில் உள்ளது. நைஜிரியா 15 சதவீதத்துடன் கடைசியில் உள்ளது. சர்வதேச எழுத்தறிவு தினத்தில் எழுத்தறிவு தொடர்பாக விழிப்புணர்வு பேரணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றது. எழுத்தறிவு அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement